வெற்றிக்கு வழி
நம் திறமையை வளர்ப்பது எப்படி?
நாம்
ஒரு பெரிய சாதனையை செய்ய முற்படும்போது திறமை, தகுதி, உழைப்பு அனைத்தும்
சரியாக இருந்தும்கூட வெற்றியை நழுவ விடுகிறோம். இது நம் விதி, சூழ்நிலை
சரியில்லை என்றெல்லாம் காரணம் காட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக்
கொள்கிறோம். ஆனால் நாம் புற விஷயங்களில் வெற்றிக்கு தகுதி உடையவராய்
ஆனதைப்போல், மனதளவில் வெற்றிக்கு தகுதி உடையவராய் ஆகாததே நம் தோல்விக்கு
காரணம் என்பதை நாம் உணர்வதில்லை.
நம் மனதை வெற்றிக்கு தகுதி உடையதாய் ஆக்குவது எப்படி என்பதை இன்று ஒரு தகவல் பகுதி மூலம் அறிந்து கொள்வோம்.
வெளிமனம்-உள்மனம்
நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
1. வெளிமனம் நினைவு மனம் - புறமனம். ,
2. உள்மனம் ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். நாம் வெளிமனதின் மூலமாகவே இப்போது நினைப்பதையும் பேசு வதையும் செய்கிறோம்.
உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பணிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம்.
உள் மனதின் சக்தியைப்பெற்றவர்கள் பல சாதனைகளை செய்யலாம். ஆனால் வெளி மனம் நாம் எளிதில் உள்மனதோடு தொடர்பு கொள்ள முடியாதபடி தடுத்துவிடுகிறது. அப்போதும் கூட
1. மிக மிக ஆழ்ந்து சிந்திக்கும் போது,
2. மிக ஆழ்ந்து ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போது,
3. தியா னத்தின்போது,
4. தூக்கம் கண்களைச் சுற்றி ஒரு அரைத்தூக்க நிலையில் இருக்கும்போது
5. காலையில் படுக்கையில் விழிப்பு வந்ததும் வராதிருக்கும் அரை விழிப்பு நிலை யில் நாம் உள்மனதோடு தொடர்புகொள்ள முடியும்.
சரி, ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல் விக்கும் உள்மனம் காரணமாவதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். ஓர் இளைஞன் சிறந்த பேச்சாளராக ஆகவேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதாவது அவனுடைய வெளிமனம் ஆசைப்படுகிறது. அருமையான கருத்துக்களை திரட்டி, நன்றாக பேசுவதற்கு பயிற்சி எடுத்து கொள்கிறான். பேச்சுக்கலையில் தோல்வியடைகிறான். இது எதனால்? அவனுடைய உள் மன தின் அவநம்பிக்கையால் உள்மனம் என்ன நினைக்கிறது என்பதை நம்மால்-அதாவது நம்முடைய வெளிமனதால் உணர முடியாது. .
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உள் மனதில் அவனைப்பற்றி ஓர் உருவகம் - ஓர் இமேஜ் படிந்திருக்கும். அதற்கு ஏற்ப அவன் நடவடிக்கை கள் அமைகின்றன. இந்த இமேஜ் ஒவ்வொருவருக் கும் அவரவர் சிறுவயதில் 14 வயதுக்குள் அமைந்துவிடுகிறது. நான் இதுவரை மேடையில் பேசியதில்லை. எனக்கு அவ்வளவாக பேச்சு வராது. எனவே நான் சிறந்த பேச்சாளராக முடியாது என்று அந்த இளைஞனின் உள்மனதில் அவனைப்பற்றிய இமேஜ் படிந்திருக்கும். அதன் விளைவாகவே அவன் மேடைப்பேச்சில் தோல்வியடைகிறான்.
சரி. அது உண்மைதானா? உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு பேச்சாளராக தகுதி இல்லையா? அப்படியல்ல. நிச்சயம் அவனுக்கு தகுதி இருக்கிறது. தகுதி இருப்பதால்தான் ஆசை வருகிறது. சிறு வயதில், பெரியவர்கள் நம்மிடம் அதைச் செய்யாதே. இதைச்செய்யாதே என்று எதிர்மறையாக கூறி, கூறி நமது திறமைகளைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்குள் உருவாக்கிவிடுகிறார்கள். ஆகவே அவனுடைய உள் மனதின் இமேஜில் பேச்சாளராக முடியாது என்ற கருத்தே படிந்திருக்கிறது.

கற்பனை செய்க
அவன் தன் உள்மனதை தான் சிறந்த பேச்சாளர்தான் என்று நம்பவைத்தால் அவன் நிச்சயம் வெற்றிபெற்றுவிடுவான். இதை எப்படி செய்வது?
அவன் தன் பேச்சுத்திறமையை நிரூபிக்கும் வகையில் நடந்த சம்பவங்களை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டும். அவன் பேச்சை கேட்டவர்கள் யாராவது பாராட்டியது, அவன் சிறுவயதில் ஏதாவது பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கியது போன்ற சம்பவங்கள். அவன் சிறந்த பேச்சாளராகிவிட்டதைப்போலவும் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் மேடையில் பேசி கைதட்டல் வாங்குவதைப்போலவும் மனதில் மனப்படங்களை கற்பனை செய்து, அவற்றை உணர்ந்து அனுபவித்து பார்க்கவேண்டும். இவை ஆழ்மனப்பதிவுகளாக உள் மனதில் பதிவாகின்றன.
வெளிமனம் மூலம் பேச்சாளர் ஆவதற்கு படித்தல், பேச்சுப்பயிற்சி போன்றவற்றை கையாண்டு வரும் அதே நேரத்தில், தன் உள் மனதையும் தயார்படுத்திக்கொண்டு வந்தால் அந்த இளைஞன் நிச்சயம் வெற்றிபெற முடியும்.
நீங்கள் எந்தத் துறையில் சாதனை படைக்க விரும்புகிறீர்களோ அந்தத்துறையில் சாதனை செய்து வெற்றி பெற்று விட்டதாகவே கனவு கண்டு அதை ஆழ்மனதில் பதியவையுங்கள். உதாரணமாக பேச்சாளர் ஆக விரும்புபவர்கள், நான் ஒரு சிறந்த பேச்சாளன் என்றால் மிக அற்புதமாக மேடையில் பேச முடியும் என்பது போன்ற நேர்மறை- பாசிடிவ்-எண்ணங்களை ஆழ்மனதில் பதிய வைக்கவேண்டும். இதை சுய கட்டளை - ஆட்டே சஜஷன் என்பார்கள் அதற்கான வழிமுறை.
வெற்றி பாதையில் செல்ல...
1. இரவு தூங்கச்செல்லும் முன் கண்களை மூடி படுத்துக்கொண்டே உடல் முழுவதும் தளர்வாக இருக்கச்செய்க. 1 முதல் 10 வரை எண்ணுக. இப்போது சுயமனோவசியம் செய்யப் பட்ட நிலை. இப்போது உங்கள் நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை திரும்பத்திரும்ப கூறுங்கள்.
2. உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அரை விழிப்பு நிலையில் - பாசிட்டிவ் எண்ணங்களை ஆழ்மனதில் விதையுங்கள்.
ஒரு முக்கியமான விஷயம்
1. நீங்கள் கூறும் வாக்கியம் பாசிட்டிவாக இருக்கவேண்டும். நெகடிவாக இருக்கக்கூடாது. உ.ம். நான் மேடையில் உளறமாட்டேன் என்று கூறக் கூடாது.
2. நிகழ்காலத்தில் வாக்கியத்தை அமையுங்கள். உ.ம். மேடையில் அற்புதமாக பேசும் சக்தி எனக்கு இருக்கிறது.
இதுபோன்று உங்கள் உள்மனதை தயார் செய்துவிட்டால் அது உங்களுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும். நீங்கள் நடக்க வேண்டிய வெற்றிப்பாதையில் உங்கள் உள்மனமே உங்களை வழி நடத்திச்செல்லும்.
வெற்றி உங்களுக்கே
மேடை ஏறி பழகுவோம்!
சிறந்த பேச்சாளராகும் வரை
இதுவரை எந்த மேடையிலும் பேசியதில்லை, ஆனால், பேச வேண்டும் என்று ஆசை இருக்கின்றது, ஆனால் எப்படி பேசுவது என்று இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு சிறிய பலனை தரும். மேடையில் ஏறி பேசுவது என்பது சின்ன விஷயமாக இல்லாவிட்டாலும், பயிற்சியின் மூலம் நம்மாலும் பெற்றுவிட முடியும். முதலில் நாம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பழக வேண்டும். புதிதாக மேடை ஏறுபவர்களுக்கு, மேடையில் பேசுவது என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர் மைக் முடிவு போய் நிற்பதே ரொம்ப முக்கியமான ஒன்றாகும். சில பேருக்கு பத்து பேர் இருந்தாலே உட்காருவதற்கு ஒரு கூச்சம், பயம். இதெல்லாம் இயல்பாகவே ஏற்படும். அதனால், நாம் மேடை ஏறியவுடனேயே நன்றாக பேச வேண்டும் என்பதில்லை. முதலில் நாம் மேடை ஏறி பழக வேண்டும். மேடைப் பேச்சைப் பொறுத்த வரை மூன்று விதமாக பிரிக்கலாம்:1. மேடை ஏறிப் பழக வேண்டும்
2. பேசிப் பழக வேண்டும்
3. திட்டமிட்டு பேச வேண்டும்
இந்த மூன்றையும் நாம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் நம்மாலும் திறம்பட பேச்சாளராக செயல்பட முடியும். முதலில் மேடை ஏறிப் பழகுதல் பற்றி பார்ப்போம்.
1. மேடை ஏறிப் பழக வேண்டும்
சிறு சிறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கருத்துக்களைப் பதிவு செய்து பழக வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள், ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடையில் கூச்சம், பயம் போன்றவைகளை போக்கிப் பழக வேண்டும்.
மேடையில் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும், நாமும் இந்த மேடையில் அமர தகுதியானவர்தான் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அதேப்போன்று, மேடையில் அமர்ந்து இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும்.
ஒரு மேடையில் ஏறும்போது, நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை சரிபார்த்து விட்டுச் செல்ல வேண்டும். இடையில் எழுந்து செல்வது போன்று நிலையை ஏற்படுத்தக் கூடாது.
மேடைப் பேச்சாளர்கள் எப்பொழுது கடிகாரம் கட்டியிருந்தால் குறித்த நேரத்தில் நம்முடைய உரையை முடிக்க முடியும். சிறு சிறு மேடைகளை நாமே உருவாக்கி, பழக வேண்டும். அப்பொழுது, மேடை என்பது, நமக்கு சாதாரணமாக போகிவிடும். நமக்கு முன் கீழே இருப்பவர்களுக்கு உட்கார தயக்கம் இல்லை என்கிறபோது, நாம் ஏன் அவர்களுக்கு முன் உட்காருவதற்கு அச்சப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விடலாம். இதனால்,மேடை ஏறிப் பழகிக் கொண்டே இருக்க வேண்டும். மேடையில் எந்தவிதப் பதற்றமுமின்றி அமரப் பழகிக் கொள்ள வேண்டும்.
2. பேசிப் பழகுதல்:
பேச்சாற்றல் என்பது உடனேயே வருவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஒரு சிலருக்கு இயல்பாகவே அவர்களுடைய பேச்சுத்திறன் சிறப்பாக அமைந்திருக்கும். அதனால், நாமும் அப்படி எதிர்பார்க்க முடியாது.
சாதாரணமாக நாம் ஒருவரிடம் பேசுவதற்கும், மேடையில் ஏறிப் பல்வேறு மனிதர்களுக்கு மத்தியில் பேசுவதற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. அனதால், நாம் முதலில் கிடைக்கக்கூடிய மேடைகளில், தயக்கம் இல்லாமல் பேச வேண்டும். அதில், இருக்கக்கூடிய பிழைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பழக வேண்டும. பேசும் போதே நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்ய வேண்டும்.
அத்தோடு, மக்களைப் பார்த்து மேடையில் உள்ளவர்களை பார்த்து, அழகான முறையில் இயல்பாக பேச வேண்டும். நாம் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பேச வேண்டும். அதோடு, நாம் பேசியதை ரெக்கார்டு செய்து, தனிமையில் இருந்து அதை நாம் கேட்க வேண்டும். நாம் எந்த இடத்தில் எப்படி பேசுகின்றோம். சீர்த்திருத்த வேண்டிய இடங்கள் எது என்பதுப்பற்றி, சிந்திக்க வேண்டும். அதோடல்லாமல் நம்முடைய சத்தத்தின் அளவு எந்த இடத்தில் உயர வேண்டும். எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் நுணுக்கமாக பார்த்து, அதை அடுத்த மேடையில் சீர்த்திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
இதுவெல்லாம், நம்முடைய மேடைப் பேச்சை அலங்கரிக்க செய்யும் பயிற்சிகளாகும். அதோடு, நீங்களாக ஒரு மேடையை உருவாக்கி பேசலாம். அதாவது, கண்ணாடியின் முன்பு, தனிமையில் நின்று, உங்களுடைய பெற்றோர்களுககு முன்பு பேசிப் பழகலாம். இதுவெல்லாம், உங்களுடைய பேச்சு திறமைக்கு வலுசேர்க்க உதவும்.
3. திட்டமிட்டு பேசுதல்:
மூன்றாவது நாம் திட்டமிட்டு பேசுதல் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான், நீங்கள் பேச்சாளர் என்பதற்கானவைகளை உங்களுக்கு முன் இருப்பவர்களிடம் நிரூபிக்கவும், அவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை உள்வாங்கவும், உங்களுக்கு பாராட்டுக்களை பெற்றுத் தரவும் உதவக்கூடியதாக இருக்கும்.
எல்லா மேடைகளிலும் நாம் விரும்பக்கூடியது பேசக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான தலைப்புக்களில் நம்மை பேச அழைப்பார்கள். அதுபோன்று, நேரங்களில் நாம் அதற்கான தகவல்களை சேகரித்து, அந்த நிகழ்ச்சியின் கருத்து மாறிவிடாமல் பேசிப் பழக வேண்டும்.
அதோடு, நேரமும் முக்கியமான ஒன்றாகும். கொடுக்கப்பட்ட நேரத்தில், நாம் பேச வேண்டிய தலைப்புக்களில் பேச வேண்டும் என்றால், நம்மிடம் திட்டமிடல் இல்லாமல் அது சாத்தியமாகாது. நாம் பேச வேண்டிய தலைப்புக்கள் தொடர்பான ஆழமான வாசிப்புகள் இருக்க வேண்டும். தகவல் சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டால்தான் நாம் அந்த உரையை நிகழ்த்த முடியும்.
அதோடு, நாம் ஒவ்வொரு சின்ன சின்ன தலைப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்புக்கும் இவ்வளவு நேரம் என்று நேரத்தை குறித்து பேசிப் பழக வேண்டும். அவ்வாறு பேசிப் பழகும்போது,நமக்கு குறைவான நேரம் கொடுக்கப்பட்டாலும், அதிலும் நம்மால் முழுமையான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
சில நேரங்கள் நாம் பேச வேண்டிய தகவல்களைக்கூட நமக்கு முன்னர் பேசக்கூடியவர் பேசிவிட்டு சென்றாலும்,நாம் அதை சமாளித்து பேசுவதற்குண்டான திறனை வளர்த்துக் கொண்டு, பேசி பழக வேண்டும்.
நாம் பேசப் போகும் மேடையின் மூலம், பல்வேறு மக்கள் அறிவுப் பெற்று, அவர்களிடம் ஒரு சுயமாற்றம் ஏற்பட வேண்டும என்ற எண்ணத்துடன் மேடைக்குச் செல்ல வேண்டும். இதுபோன்ற, விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டு விட்டு, என்னுடைய முதல் மேடை எப்படி இருந்தது என்பதுபற்றியும் அவரிடம் கூறினேன்.
நான் கல்லுரியில் படிக்கும்போது, ஒரு மேடையில் பேச வேண்டும் என்றார்கள். நானும் தயங்காமல் ஏறினேன். நான் பேசும்போதே, தொடக்கத்தில் ஒரு விஷயத்தை கூறியவாறு ஆரம்பித்தேன்.
இந்தப் சின்னப் பையனின், கன்னிப் பேச்சை கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் ஆன்றோர்கள், சான்றோர்களே,கல்லூரி மாணவ, மாணவிகளே! வணக்கம் என்றுவிட்டு, எறும்பு தரையில் கிடக்கும் மண்ணில், தனக்கு தேவையான சுவீட்டையும் மட்டும் எவ்வாறு எடுத்துக் கொள்ளுமோ, அதேப்போன்று, நான் பேசுவதில் உங்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு, தேவையில்லாததை விட்டு விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியவுடன், மக்களின் கைத்தட்டல்கள் என்னை உற்சாகப்படுத்தியது. அதனுடைய தொடக்கம் இன்னும நிறைய மேடைப்பேச்சுக்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இன்னும் மேடைப் பேச்சே வளர்த்துக் கொள்ள உதவும் புத்தகங்களான …. என்ற புத்தகங்களையும் படிக்குமாறு அவனுக்கு அறிவுறுத்தினேன். அவனும் சந்தோஷமாக இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டோம் என்ற சந்தோஷத்தில், நானும் மேடையில் ஏறிப் பழகுகிறேன். சிறந்த மேடைப் பேச்சாளராக ஆகும் வரை என்று விடைப்பெற்றுச் சென்றான்.
Comments
Post a Comment