
உங்களது லெப்டொப் திருட்டு போனால் கண்டு பிடிப்பது எப்படி? 3:04 AM இன்றைய பதிவிலே உங்களது மடிக்கணணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு விடயத்தை பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு விடயமாக மாறி விட்டது. எங்கு பாத்தாலும் திருட்டு..! எதில் பார்த்தாலும் திருட்டு என்றாகிவிட்டது. சாதாரணமாக எம்முடைய ஏதேனும் ஒரு பொருள் திருட்டு போனால் போலீஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிடுவது வழக்கம். ஆனால் எம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது இணையத்தை பயன்படுத்த உதவும் ஏதேனும் டிவைஸ்-கள் திருட்டு போனால், போலீஸுக்கு செல்லும் முன்னரே குறித்த டிவைஸ்-களில் காணப்படும் ட்ரெக்கிங் செயலிகள் மூலம் குறித்த டிவைஸ்-ஐ கண்டுபிடிக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் செயலிகளும் மென்பொருட்களும் இன்று அறிமுகமாகி விட்டன. ஆகவே இதோ போல இன்றைய பதிவிலே எமது லேப்டொப் காணாமல் போனால் அல்லது திருட்டு போனால் கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம். அதவாது உங்களது திருட்டு போன மடிக்கணனி ஆன் செய்யப்படும் போது/ இன்டர்நெட் உடன் இணையும் போது குறித்த மடிக்கணனி எந்த இடத்தில் இருக்கிறது என்பத...