போனில் இருக்கும் வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பேஸ்புக்-இல் ஷேர் செய்வது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருமே பார்த்து பழகிய ஒரு விடயம் தான் அனிமேஷன் போட்டோகள். தமது பயனர்களுக்கு பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் பேஸ்புக் நிறுவனம், அண்மைய காலத்தில் எமது பேஸ்புக் கணக்கில் அனிமேஷன் போட்டோகளை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.

பேஸ்புக் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேட்பை பெற்ற இந்த அனிமேஷன் போட்டோகள் தினம்தோறும் லட்சக்கணக்கில் பேஸ்புக்-இல் பதிவேற்றப்படுவது நாம் யாவரும் தினமும் பார்க்கும் ஒரு விடயமாகி விட்டது. ஆனால் இப்போது பேஸ்புக்-இல் போட்டோ அனிமேஷன்-களை விட வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பகிர்வது ட்ரெண்ட் ஆகி விட்டது. 

ஆகவே இன்றைய பதிவிலே எமது போனில் இருக்கும் வீடியோக்களை அழகிய அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் அனிமேஷன் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து அதிலே வீடியோ என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து உங்களது போனில் இருக்கும் ஏதேனும் ஒரு  வீடியோவை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் 'ஜிப்' என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வீடியோவை மிக இலகுவாக அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற முடியும். அத்துடன் அதை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் ஷேர் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது இந்த அனிமேசன் செயலி.
ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற உதவும் இந்த ஆன்ராயிடு அனிமேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.




Comments

Popular posts from this blog

Trichy jobs